Contest


News Feed
Applications

Friends (2)
Mutual Friends (0)
No mutual friends yet
Groups (1)

Recent updates

Pinned Items
Recent Activities
 • ‘உனக்கு நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் அமுது செய்விப்பேன்’ என்று பெருமாளிடம் ஆண்டாள் சொல்லியிருந்தாள். அவளால் முடியவில்லை. அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து ஶ்ரீமத் இராமானுசர் தான் செய்து கணருளப் பண்ணினார். இதனால் உடையவரை ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று கொண்டாடியதாக ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று வாழித் திருநாமம் உண்டு. ஆனால் இன்று அவளுக்கே தளிகைகள் இல்லை என்ற செய்தி 60 வருடங்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் அவலட்சணத்தை வெளிப்படுத்துகிறது. அறம் நிலையாத் துறையில் பணிபுரிபவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்கும் தருணங்களில் ‘இந்தச் சோறு உண்ண எனக்கு எள்ளளவாவது அனுமதி உண்டா? ஆண்டாளின் சோற்றை அல்லவா நான் உண்கிறேன்? அவளைப் பட்டினி போட்டு உண்ணும் இந்த உணவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும். பணம் கொடுத்து வேலைக்கு வந்தவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது என்றாலும், இப்பதிவைப் படிக்கும் யாராவது ஒருவருக்காவது அந்த எண்ணம் வரலாம். அப்படியொரு எண்ணம் வரவேண்டியது ஏன் என்று கேட்கலாம். ‘நான் உண்ணும் உணவை அரசு அற நிலையத் துறை மூலம் அளிக்கிறது. ஆனால், துறையோ கோவிலின் சொத்தை உண்பவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்காமல், கொள்ளை போக விட்டு, மற்ற வழியில் அரசு ஈட்டும் வருமானம் வழியாக எனக்கு இந்தச் சோற்றை அளிக்கிறது. அப்படியும், இந்தச் சோற்றுக்குக் காரணமான தெய்வ வடிவங்களின் வயிற்றில் அடித்துவிட்டு எனக்கு அளிக்கிறது. ஆகவே தெய்வங்களைக் கொன்று அரசு அளிக்கும்......
  1. Continue Reading
  Post is under moderation
  Stream item published successfully. Item will now be visible on your stream.
 • கைப்பெருமாள்
  •   Personal
  •   Friday, 15 September 2017
  ‘ஆமருவி, இங்க வாயேன், என் கையப் பாரு. எப்பிடி பெருமாள் தெரியறார் பார்,’ நான் நெய்வேலியில் இருந்து உற்சவத்திற்காகத் தேரழுந்தூர் வந்ததும் வராததுமாக எதிர்த்த வீட்டு அலமேலுப் பாட்டி அழைத்தாள். கைல பெருமாள் தெரியறாரா? ஊருக்கு வந்தவுடனே கிரகம் பிடிச்சு ஆட்டறதே என்று நினைத்தபடியே, பாட்டியின் கையைப் பார்த்தேன். பாட்டியின் உலர்ந்த கையில், ரேகைகளின் ஊடே காலையில் நீராடும் போது தேய்த்துக்கொண்ட மஞ்சள் தெரிந்தது. ‘ பார், பார் என்னமா சிரிக்கறார் பார்’, என்றாள் பாட்டி. கலவரத்துடன் அவளது மகன் ரங்கன் மாமாவைப் பார்த்தேன். ‘தெரியறதுன்னு சொல்லு. இல்லேன்னா விடமாட்டா,’ என்றார். கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும் பார்த்துசிட்டு, ‘இப்ப தெரியல்ல. நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன். ஒருவேளை அப்ப எனக்குத் தெரிவாரோ என்னவோ’ என்று ஓடி வந்தேன். இருந்த சில நாட்களில் வருவோர் போவோரிடம் எல்லாம் கையைக் காட்டிக் கொண்டிருந்தாள் அலமேலுப் பாட்டி. அவளது கணவர் ஶ்ரீவத்சையங்காருக்குக் கண் அவ்வளாவாகத் தெரிவதில்லை என்பதால்  அவரை மட்டும் விட்டுவிட்டாள். முப்பது வருஷங்கள் கழித்து, சென்ற ஆண்டு மீண்டும் தேரழுந்தூர் உற்சவத்திற்குச் சென்றேன். பாட்டியின் பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதியதாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். இடிப்பதற்கு முன் ஒருமுறை பார்த்துவரலாம் என்று முன்னர் பாட்டி உட்கர்ந்திருந்த இடத்தைத் தாண்டி மெள்ள உள்ளே சென்றேன். ‘வாடா ஆமருவி. வந்து பாரேன். பெருமாள் உற்சவம் எப்படி நடக்கறது பார். நன்னா தெளிவா தெரியறது பாரேன்,’ என்று உள்ளிருந்து......
  1. Continue Reading
  Post is under moderation
  Stream item published successfully. Item will now be visible on your stream.
 • அப்ப மெட்ரிக், மாநிலப் பாடங்கள் படிக்கும் மாணவர்கள் மடையர்களா? இல்லை. ஏதுமறியா மாணவர்கள் மடையர்களாக ஆக்கப்படுகிறார்கள். யோசிக்கும் திறன் படிப்படியாகக் குறைக்கப்படும் வகையில் அரசுத் தேர்வுக் கேள்விகள் உள்ளன. பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே ஒப்பிக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் வேறு என்னவாக ஆக முடியும்? சிந்தித்து எழுதவேண்டிய தேவையே இல்லை என்னும் அளவில் மாநிலப் பள்ளியிறுதித் தேர்வுகள் உள்ளன. திறமைக்கு மதிப்பில்லாமல், மனப்பாடம் செய்வது மட்டுமே படிப்பு என்கிற அளவில் அப்பாவி மாணவர்கள் நிறூத்தப்படுகிறார்கள். அகில இந்தியப் போட்டித் தேர்வுகளிலும், வெளி நாட்டுப் பல்கலைகளின் போட்டித் தேர்வுகளிலும் அவர்களால் அதிக அளவில் வெற்றி பெற முடிவதில்லை. உதாரணம் சொல்ல முடியுமா? சிங்கப்பூரில் உள்ள இந்திய சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் அவ்வப்போது தமிழக மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் வந்து சேர்வதுண்டு ( அவரகளின் பெற்றோருக்கு மாற்றல், புதிய வேலை என்று பல காரணங்கள்). அவர்கள் சென்னை, கோவை முதலிய நகரங்களில் நல்ல பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். நான் அறிந்து, பல மாணவர்கள் சேர்ந்த சில மாதங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொள்கிறார்கள். ஆக, பிரச்சினை மாணவர்களிடத்தில் இல்லை. கல்வித் திட்டம், ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு – இவற்றில் தான் பிரச்சினை. சிங்கப்பூரில் படிக்கும் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? பொதுவாக, சி.பி.எஸ்.ஈயுடன் ஐ.பி. என்னும் கடும் பாடத் திட்டத்திலும் மாணவர்கள் பயில்கிறார்கள். +2 முடித்தவுடன் பட்டப்படிப்பிற்கு என்று......
  1. Continue Reading
  Post is under moderation
  Stream item published successfully. Item will now be visible on your stream.
 • தமிழில், தமிழ் நாட்டில் சொல்லக்கூடாத சொல் ‘நீட்’ (#NEET). அப்படி என்ன பாவம் செய்தது அது? பாவம் செய்தர்வர்கள் ராஜாஜியின் அறிவுரைப்படி விஷக்கிருமிகளைப் பரவவிட்டவர்கள். அவர்களை விட்டுவிட்டு மாணவர்களின் பொதுவான கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். மருத்துவத்திற்கு நுழைவுத்தேர்வு தேவையா?  மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு புதிதல்ல. சில ஆண்டுகள் முன்புவரை இருந்தது தான். நல்ல தரமான மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்பதாலும், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதாலும் அந்த முறை உருவானது. அதனைக் கெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. தேர்வை ரத்து செய்தார். +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி என்று கொண்டுவந்தார். புரியாமலே பாடத்தைப் படித்து, மனப்பாடம் செய்து, அப்படியே தேர்வுத்தாளில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் மாணவர்கள் செல்ல வழிவகுத்தார் கலைஞர். ஏன் மருத்துவத்திற்கு நுழைவுத்தேர்வு ரத்தானது? மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டம் முதலியவற்றில் படித்து வரும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. காரணம் அத்தேர்வில் மாணவர்களின் நினைவுத் திறன் சோதிக்கப்படவில்லை, அறிவாற்றல் சோதிக்கப்பட்டது. புரியாமல் படித்தாலும், மனப்பாடம் செய்து படித்தாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற முடியாது. இந்த நுழைவுத் தேர்வுக்கென்று நகர்ப்புறங்களில் தனியான பயிற்சிக் கூடங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் இந்தப் பயிற்சிக் கூடங்களில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதையும், குறித்த நேரத்திற்குள் சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் என்று பலவற்றைக் கற்றனர். இது கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாமலானது. இதனால் நுழைவுத் தேர்வை......
  1. Continue Reading
  Post is under moderation
  Stream item published successfully. Item will now be visible on your stream.
 • Right Off Center
  Right Off Center created a new blog post, குரு
  குரு
  •   Personal
  •   Wednesday, 06 September 2017
  புரொபசர்  சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார். ‘வேர் ஈஸ் ஹி?’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி. பி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை.. விஷயம் இதுதான். சக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான்? எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி. ஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரும் இல்லை என்று சொன்னார்களாம். புரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார். அடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை. அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது?’ என்கிற ரீதியில் நாங்கள்......
  1. Continue Reading
  Post is under moderation
  Stream item published successfully. Item will now be visible on your stream.
There are no activities here yet
Unable to load tooltip content.

For information regarding Sponsored posts,
links or any other queries Contact Us

Sponsored Links

Get professional essay help with  Privatewriting.com  - your reliable academic partner.

Many highly-experienced and reliable writers from domypapers.com are ready to help you by request.

If you don't know where to get quality writing assistance, you should go to CustomWritings.com for hiring academic writers.

Are you struggling with essay writing now? This website SmartWritingService.com will certainly help you with that.